மேட்டூர் உபரிநீர் திட்ட பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
நங்கவள்ளி அருகே மேட்டூர் உபரிநீர் திட்ட பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.
மேச்சேரி:-
மேட்டூர் உபரிநீர் திட்ட பணிக்காக நேற்று நங்கவள்ளி அருகே குன்றிவளைவு பகுதியில் தனியார் விவசாய நிலத்தில் குழாய் பதிக்க எந்திரம் மூலம் பள்ளம் தோட்டப்பட்டது. இதுகுறித்து அறிந்த விவசாயிகள் அங்கு சென்று குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. நில உரிமையாளர்களிடம் அனுமதி வாங்காமல் குழாய் பதிக்க கூடாது என்று விவசாயிகள் கூறினர். தகவல் அறிந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி்னர். அப்போது அனுமதி பெறாத இடத்தில் குழாய்கள் பதிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story