முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
சேலம்:-
கர்நாடக அரசு பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதைதொடர்ந்து நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய தேசிய லீக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ., திப்பு சுல்தான் பேரவை உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சையத் மூசா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாநில தலைமை குழு உறுப்பினர் விநாயகம், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவர் பூமொழி உள்பட பலர் பேசினர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story