மோட்டார் சைக்கிள் மீது கார் மாதல் பெண் பலி
தஞ்சை அருகே வல்லத்தில் காரின் டயர் திடீரென வெடித்ததால் மோட்டார் சைக்கிள் மீது கார் மாதியது. இதில் ஈரோட்டை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
வல்லம்;
தஞ்சை அருகே வல்லத்தில் காரின் டயர் திடீரென வெடித்ததால் மோட்டார் சைக்கிள் மீது கார் மாதியது. இதில் ஈரோட்டை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
உறவினர் வீட்டுக்கு வந்தார்
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் அப்துல்மஜீத். இவருடைய மனைவி தில்ஷாத்பானு(வயது45). இவர் திருச்சி காட்டூரில் உள்ள அவருடைய உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று காலை தில்ஷாத்பானு அவருடைய அண்ணன் மகன் தமீம்உசேனுடன்(21) திருச்சியிலிருந்து மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
நேற்று மதியம் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் தில்ஷாத்பானு மற்றும் அவருடைய அண்ணன் மகன் தமீம் உசேன் ஆகிய இருவரும் தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்றனர்.
வல்லம் பிரிவு சாலை அருகே அவர்கள் மோட்டார் சைக்கிள் சென்ற போது அவர்களின் பின்புறம் திருவாரூர் மாவட்டம் பேரளத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (25) என்பவர் காரை ஓட்டி வந்தார். இந்த காரின் டயர் திடீரென வெடித்தது.
பரிதாப சாவு
இதனால் நிலை தடுமாறிய கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த தமீம் உசேனின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தில்ஷாத்பானு, தமீம் உசேன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தில்ஷாத்பானு துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தமீம் உசேன் படுகாயமடைந்தார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தில்ஷாத்பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம டைந்த தமீம் உசேனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story