சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் திருடியவர் கைது


சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் திருடியவர் கைது
x
தினத்தந்தி 19 March 2022 2:11 AM IST (Updated: 19 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சங்ககிரி:-
சங்ககிரிஅருகே சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
வக்கீல் வீட்டில் திருட்டு
சங்ககிரி அருகே உள்ள வளையசெட்டிபாளையம் அத்தாகாடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆவார். இவருடைய மனைவி நிர்மலா (வயது 55). நிர்மலா கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தோட்டத்துக்கு சென்றார். 
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 9¼ பவுன் நகைகள், 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 
வாலிபர் கைது
மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள எலந்தகுட்டை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27), ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் திருடியது தெரியவந்தது. 
இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, செல்போன்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜ்குமார் மீது கொலை, வழிப்பறி, திருட்டு வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story