மனைவி, கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலையில் கைதான மனைவி, கள்ளக்காதலன் சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை தொடர்பாக மேலும் ஒருவரிடம் விசாரணை நடந்தது.
சேலம்:-
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த போர்வெல் தொழிலாளி வெங்கடேசன் (வயது 40). இவர், தென்ஆப்பிரிக்காவில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமிக்கும், உறவினர் குமரன் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த வெங்கடேசன், கள்ளக்காதல் தொடர்பாக விஜயலட்சுமியையும், குமரனையும் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் வெங்கடேசனை கொலை செய்து உடலை சாக்்கில் மூட்டையாக கட்டி ஒரு கிணற்றில் வீசி விட்டனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி, அவருடைய கள்ளக்காதலன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த கொலையில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story