‘லிப்ட்’ கொடுப்பதாக ஏமாற்றி பள்ளி மாணவி கற்பழிப்பு
தார்வார் டவுனில், ‘லிப்ட்’ கொடுப்பதாக ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பள்ளி மாணவியை வாலிபர் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
உப்பள்ளி:
பள்ளி மாணவி
தார்வார் (மாவட்டம்) டவுன் அன்னிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஷ்பாக் ராஜேஷாப்(வயது 23). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் டவுன் பகுதியில் சுற்றித்திரிந்தார். அப்போது இவரிடம் 16 வயதுடைய ஒரு மைனர் பெண் லிப்ட் கேட்டுள்ளார். அந்த மைனர் பெண் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். வீட்டிற்கு செல்ல நேரமானதை தொடர்ந்து அவர் ராஜேஷாப்பிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
அவருக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்ட ராஜேஷாப், வழியில் அட்னூர் கிராம சாலையில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தனது நண்பரை பார்க்க வேண்டும், அவரை பார்த்து விட்டு செல்லலாம் என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதை நம்பிய மைனர் பெண், அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
வாலிபருக்கு வலைவீச்சு
இதையடுத்து ராஜேஷாப், அந்த மைனர் பெண்ணை அழைத்துக் கொண்டு அந்த விவசாய தோட்டத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்து அந்த மைனர் பெண்ணை அவர் மிரட்டி கற்பழித்து இருக்கிறார். மேலும் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் பயந்துபோன அந்த மைனர் பெண் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மைனர் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன்னுடைய பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி அன்னிகேரி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ராஜேஷாப்பையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story