சீனிவாசபெருமாள் கோவில் தேரோட்டம்


சீனிவாசபெருமாள் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 19 March 2022 2:32 AM IST (Updated: 19 March 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை விடம் பிடித்து இழுத்தனர்.

திருவிடைமருதூர்;
நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை விடம் பிடித்து இழுத்தனர். 
சீனிவாச பெருமாள் கோவில்
கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார்  சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது.  இங்கு மூலவராகவும் உற்சவராகவும் விளங்கும் கல்கருடபகவான் ஆண்டுக்கு 2 முறை மட்டும்  வீதிஉலா வருவது பிரசித்திபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதிஉலா நடைெபற்றது.
தேரோட்டம்
கடந்த 13-ம் தேதி கல்கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
விழா ஏற்பாடுகளை கோவில்  பணியாளர்கள், உபயதாரர்கள்  செய்து இருந்தனர். 

Next Story