குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நாளை நடக்கிறது.


குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நாளை நடக்கிறது.
x
தினத்தந்தி 19 March 2022 2:41 AM IST (Updated: 19 March 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நாளை நடக்கிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்
நாளை நடக்கிறது.
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
பள்ளியின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும், அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது.
மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சியளித்து இந்த குழுக்களை சிறப்பாக செயல்பட ஊக்கம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மறுகட்டமைப்பு செய்வதற்கும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாநில மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலமாக மாணவர்களின் பெற்றோர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டத்தில் உள்ள அந்தந்த அரசு பள்ளிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அந்தந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தவறாது கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சியிலும், மாணவர்களின் முன்னேற்றத்திலும் பங்கெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
----


Next Story