மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தவர் மீது வழக்கு
மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அனிதா(வயது 27). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்து, தற்போது ஒன்றரை வயதில் ரஷீதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அனிதா ஒரு புகார் அளித்துள்ளார். அதில், நேற்று காலை தான் வீட்டில் இருந்தபோது தனது கணவர், மீனாட்சி என்பவரை காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக கூறி, மீனாட்சியுடன் வீட்டுக்கு வந்தார். எனது அண்ணன்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் எனது கணவரிடம் ஏன் இப்படி செய்தாய் என கேட்டபோது, அவர் என்னை அடித்து கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றுவிட்டார். முதல் மனைவியான நான் உயிரோடு இருக்கும்போது, என்னை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில் செல்வகுமார், மீனாட்சி ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து மீனாட்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story