கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சில கடைகளில் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராஜகோபால், அமுதா, துரை, சிவகுமார், சுரேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் கடைகளில் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story