மின்கம்பி உரசியதில் லாரி எரிந்து நாசம்
மின்கம்பி உரசியதில் லாரி எரிந்து நாசமானது.
விக்ரமங்கலம்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று மாலை ஒரு மினி லாரி வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஏலாக்குறிச்சியில் இருந்து வி.கைகாட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. விக்கிரமங்கலத்தை அடுத்த பெரிய திருக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது தாழ்வாக செல்லும் மின்கம்பிகளின் மீது மினி லாரியில் ஏற்றப்பட்டிருந்த வைக்கோல் உரசியதாக கூறப்படுகிறது. இதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த டிரைவர் பார்த்திபன்(வயது 29) மினி லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி லாரி முழுதும் எரிந்து நாசமானது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் தீயணைப்புத்துறையினர், மினி லாரி மற்றும் கீழே கிடந்த வைக்கோல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story