புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 March 2022 2:58 AM IST (Updated: 19 March 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை குறித்த விவரம் வருமாறு

 குண்டும், குழியுமான சாலை
 தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை ஈ.பி.காலனியில் இருந்து புதிய பஸ் நிலையம் மற்றும் மாதாக்கோட்டை சாலையை இணைக்கும் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் இருசக்கர மற்றும் கார்களில் வருபவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், நாஞ்சிக்கோட்டை.

Next Story