பிரதமர் மோடிக்கு பிறகு பா.ஜனதா பலம் இழந்துவிடும்; வீரப்பமொய்லி பேட்டி
பிரதமர் மோடிக்கு பிறகு பா.ஜனதா பலம் இழந்துவிடும் என்று வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த சோனியா காந்தி விரும்புகிறார். அதன் மூலம் கட்சியை பலப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்கிறார். பா.ஜனதா நிரந்தரமாக இதே பலத்துடன் இருக்காது. பிரதமர் மோடிக்கு பிறகு அந்த கட்சி பலத்தை இழந்துவிடும். காங்கிரஸ் ஆட்சி இல்லை என்பதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதங்கப்பட தேவை இல்லை.
காங்கிரஸ் கட்சி மட்டுமே கடைசி வரை உயிர்ப்புடன் இருக்கும். பா.ஜனதா உள்பட பிற கட்சிகள் காணாமல் போய்விடும். அதனால் காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை இழக்கக்கூடாது. நானும் ஜி-23 தலைவர்கள் பட்டியலில் கையெழுத்து போட்டேன். ஆனால் தற்போது அந்த தலைவர்கள் செல்லும் பாதை சரியானது இல்லை. அதனால் அவர்களின் கூட்டத்தில் நான் கலந்துகொள்ள மாட்டேன்.
இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.
Related Tags :
Next Story