ஆவடியில் தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவடியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவடி,
ஹிஜாப்புக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை கண்டித்து ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் தேசிய கொடியை போல் ஹிஜாப் உடை அணிந்து வந்து கையில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
இதேபோல் ஹிஜாப் உடை அணிந்து கல்வி கற்க அனுமதி வழங்க கோரி சோழிங்கநல்லூரில் உள்ள முகமத் சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் யாக்கூப் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story