தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையில் இணையவழி சேவைகள் வாயிலாக தோட்டக்கலை வணிகம்


தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையில் இணையவழி சேவைகள் வாயிலாக தோட்டக்கலை வணிகம்
x
தினத்தந்தி 19 March 2022 1:19 PM IST (Updated: 19 March 2022 1:20 PM IST)
t-max-icont-min-icon

மலைப்பயிர்கள் துறையில் இணையவழி சேவைகள் வாயிலாக தோட்டக்கலை வணிகம் செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  இன்று வேளண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இணையவழி தோட்டக்கலை வணிகம் மூலம், இடைத்தரகர்கள் இன்றி தோட்டக்கலை விளைபொருட்கள் நுகர்வோருக்குச் சென்றடையும். விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு ஆகியோராலும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளிலும் உற்பத்தி செய்யப்படும் செடிகள், விதைகள், இடுபொருட்கள், வாசனை பொருட்களான ஏலக்காய், மிளகு, பட்டை, கிராம்பு போன்றவையும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களான ஜாம், ஜெல்லி, ஊறுகாய்,

உலர் பழங்கள், யூகலிப்டஸ் தைலம், போன்றவையும் இணையம் வாயிலாக விற்க ஏற்பாடு செய்யப்படும்.

பொருட்களைத் தரம் பிரித்து, சிப்பம் கட்டி விநியோகம் செய்ய, மூன்று சேமிப்பு கிடங்குகள் சென்னை, மதுரை, கோவையில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியில் ஏற்படுத்தப்படும்.

இணைய வழி விநியோக நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இத்திட்டம் இரண்டு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் சுவைதாளிதப் பயிர்களுக்கான மரபணு வங்கி

விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ற இரகங்களை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுவைதாளிதப் பயிர்களின் வகைகளும் இரகங்களும் சேகரிக்கப்பட்டு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவு செய்து பராமரிக்கப்படும்.

முதற்கட்டமாக இவ்வாண்டு, மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றிற்கான மரபணு வங்கி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் துவக்கப்பட்டு, உள்ளூர் வகைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான உழவு, நடவு, இடுபொருட்கள், அறுவடை போன்ற பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


Next Story