திருமழிசை நகர பஞ்சாயத்து முன்னாள் பெண் அதிகாரி வீட்டில் ரூ.6.72 லட்சம் கைப்பற்றப்பட்டது


திருமழிசை நகர பஞ்சாயத்து முன்னாள் பெண் அதிகாரி வீட்டில் ரூ.6.72 லட்சம் கைப்பற்றப்பட்டது
x
தினத்தந்தி 19 March 2022 1:25 PM IST (Updated: 19 March 2022 1:25 PM IST)
t-max-icont-min-icon

திருமழிசை நகர பஞ்சாயத்து முன்னாள் பெண் அதிகாரி வீட்டில் ரூ.6.72 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

சென்னை, 

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை நகர பஞ்சாயத்து முன்னாள் நிர்வாக அதிகாரி பிரேமா மீது லஞ்ச புகார்கள் கூறப்பட்டது. தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு முறைகேடாக திட்ட அனுமதி வழங்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதிகாரி பிரேமா சென்னை சிட்லபாக்கம், சர்மாநகர் 4-வது தெருவில் வசிக்கிறார். அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில், ரூ.6.72 லட்சம், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது வங்கி கணக்கில் உள்ள லாக்கரும் முடக்கப்பட்டு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறி உள்ளனர்.

Next Story