பொன்னேரி அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் மரணம்


பொன்னேரி அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் மரணம்
x
தினத்தந்தி 19 March 2022 2:21 PM IST (Updated: 19 March 2022 2:21 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் மரணமடைந்தார்.

பொன்னேரி,  

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வசித்து வந்தவர் கோலப்பன் (வயது 54). இவர் விழுப்புரம் கோட்டம் போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இதனையடுத்து சென்னை அண்ணாநகரில் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் பழவேற்காடு-பொன்னேரி செல்லும் வழித்தடம் டி-28 எண் கொண்ட பஸ்சில் நேற்று காலை 4.30 மணியளவில் பொன்னேரி நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50-க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தநிலையில் மெதூர் கிராமத்தில் அடங்கிய பாரதி நகர் பகுதியில் உள்ள பொன்னேரி நெடுஞ்சாலையில் வந்தபோது, டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில், சுதாரித்து கொண்ட அவர் பஸ்சை சாலையின் ஓரமாக சாதுர்யமாக நிறுத்திவிட்டு மயங்கிய நிலையில் சரிந்தார்.

இதையடுத்து டிரைவர் கோலப்பனை அங்கிருந்த பயணிகள் மீட்டு, பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாரடைப்பு ஏற்பட்டும் சுதாரித்து கொண்டு சரியான நேரத்தில் பஸ்சை நிறுத்தியதால் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story