ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 19 March 2022 5:32 PM IST (Updated: 19 March 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேட்டவலம்

வேட்டவலத்தை அடுத்த வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி, பச்சையாத்தாகுளம் மற்றும் ஓடை ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. 

கீழ்பென்னாத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலட்சுமி, வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் அல்லி, வட்ட சார் ஆய்வாளர் சாகுல் அமீது, குறு வட்ட நில அளவர் சென்னையன், ஊராட்சி மன்ற தலைவர் திருமலை, கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன், ஊராட்சி செயலாளர் ரவி மற்றும் கிராம உதவியாளர்கள், போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 அதில் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. 

Next Story