வேடசந்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது


வேடசந்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 19 March 2022 6:03 PM IST (Updated: 19 March 2022 6:03 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

வேடசந்தூர்:
வேடசந்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர். நேற்று காலை அருகே இருந்த முட்புதரில் இருந்து திடீரென ஒரு பாம்பு இவரது வீட்டுக்குள் புகுந்தது. இதை பார்த்ததும் சாப்பிட்டு கொண்டிருந்த குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி அங்கு பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Next Story