பட்டிவீரன்பட்டி அருகே 500 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது


பட்டிவீரன்பட்டி அருகே 500 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
x
தினத்தந்தி 19 March 2022 6:28 PM IST (Updated: 19 March 2022 6:28 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே 500 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது.

பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யன்கோட்டை கிராமத்தில் மருதாததி ஆற்றின் கரையோரம் மதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சுமார் 100 அடி உயரத்தில் 500 ஆண்டுகள் பழமையான மருத மரம் இருந்தது. 
இந்த மரம் எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து மருதமரத்திற்கு மஞ்சள், பால் ஊற்றி, சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். மரம் சாய்ந்த போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் விபத்து ஏதும் ஏற்படவில்லை. 
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வருவாயத்துறை ஊழியர்கள் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story