மலைரெயில் பாதையில் முகாமிட்ட காட்டுயானைகள்
மலைரெயில் பாதையில் முகாமிட்ட காட்டுயானைகள்
குன்னூர்
சமவெளி பகுதிகளில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் வறட்சியை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் இடம்பெயர்ந்து செல்கின்றன. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் இருந்தது. தற்போது மலைரெயில் பாதையில் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே 7 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இவை ரெயில்பாதை ஓரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி வருகின்றன.
மேலும் ரன்னிமேடு அருகே உள்ள அரசு விதைப்பண்ணை குடியிருப்பு, தேயிலை தோட்ட குடியிருப்பு ஆகிய இடங்களில் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அப்பகுதி மக்கள் தீ மூட்டி வருகின்றனர். மேலும் காட்டுயானைகள் நடமாட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், ரெயில்வே பணியாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். எனவே அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story