கோவா ஓட்டலில் விபசாரம்- டி.வி. நடிகை சிக்கினார்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 19 March 2022 6:52 PM IST (Updated: 19 March 2022 6:52 PM IST)
t-max-icont-min-icon

கோவாவில் ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட மும்பை டி.வி. நடிகை உள்பட 3 பெண்களை போலீசார் மீட்டனர்.

மும்பை,
கோவாவில் ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட  மும்பை டி.வி. நடிகை உள்பட 3 பெண்களை போலீசார் மீட்டனர்.
ஓட்டலில் விபசாரம்
நாட்டில் சுற்றுலா தலமாக விளங்கும் கோவாவில் பிரபலமான பெண்களை ஈடுபடுத்தி விபசாரம் நடந்து வருவதாக அங்குள்ள குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் படி போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஹபிஸ் சையத் பிலால் (வயது26) என்பவர் தான் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவது தெரியவந்தது. 
  அவரை போலி வாடிக்கையாளர் அணுகியபோது ரூ.50 ஆயிரம் பேரம் பேசி வடக்கு கோவா சாங்கோல்டா கிராமத்தில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி தெரிவித்தார்.  
டி.வி. நடிகை  மீட்பு
இதையடுத்து போலீசார் ஓட்டல் அருகே ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஹபிஸ் சையத் பிலால் தன்னுடன் 3 பெண்களை ஓட்டலுக்கு அழைத்து வந்தார். இதனை கண்ட போலீசார் உடனே அவரை மடக்கி பிடித்தனர். விபசாரத்தில் ஈடுபடுவதற்காக வந்த 3 பெண்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். இவர்கள் 30 முதல் 37 வயதுடையவர்கள் எனவும், மும்பையை அடுத்த விரார், தானேயில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதில் ஒரு பெண் மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. 
 இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபசார தொழில் நடத்தி வந்த ஹபிஸ் சையத் பிலாலை கைது செய்தனர். 



Next Story