ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதலாக 33 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 33 இடங்களில் கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும், என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 33 இடங்களில் கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும், என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெரடி நெல்கொள்முதல் நிலையங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் 27 இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17-ந் தேதி வரை சுமார் 927 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நவரை பருவ நெல் அறுவடையை முன்னிட்டு, இணையதளம் மூலம் பதிவு செய்து நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக நாளை (திங்கட்கிழமை) கூடுதலாக 33 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இடங்கள் விவரம்
பழைய கேசாவரம், வளர்புரம், திருமாதலம்பாக்கம், மேலந்தாங்கல், கே.வேளூர், அனத்தாங்கல், வெள்ளம்பி, தாளிக்கல், வேம்பி, சென்னசமுத்திரம், அகரம், மருதாலம், ஒழுகூர், செங்கல் நத்தம், கரிக்கல், வேடந்தாங்கல், சேரி, காவேரிப்பாக்கம், கீழ் களத்தூர், கீழவீதி, மேலபுலம்புதூர், பெரும் புலிப்பாக்கம், நெமிலி, செங்காடு, வள்ளுவம் பாக்கம், கூராம்பாடி, மேல் வீராணம், பரவத்தூர், சேந்தமங்கலம், காட்டுப்பாக்கம், களத்தூர், ரெட்டிவலம், ஆற்காடு.
இந்த நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் tncsc.edpc.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் மேற்கண்ட கொள்முதல் நிலையங்களையும் சேர்த்து மாவட்டத்தில் 60 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story