நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது நல்லிருக்கை. இந்த ஊரை சேர்ந்தவர் வேலு (வயது70). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து வேலு கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டான். இதனை எதிர்பார்க்காத வேலு கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் மர்ம நபர் ஓடிவிட்டான். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story