பெண்களுக்கு இலவச பஸ் சேவை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 19 March 2022 7:33 PM IST (Updated: 19 March 2022 7:33 PM IST)
t-max-icont-min-icon

லாத்தூர் மாநகராட்சி பகுதியில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மும்பை, 
லாத்தூர் மாநகராட்சி பகுதியில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இலவச பஸ் சேவை
லாத்தூர் மாநகராட்சி சார்பில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அங்கு மாநகராட்சி சார்பில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் மந்திரி அமித் தேஷ்முக் பெண்கள் இலவச பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
 விழாவில் அவர் பேசும் போது, " பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் வெளியூர்களில் இருந்து லாத்தூரில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவிகளும் பலன் பெறுவார்கள்.
மேயர், கமிஷனர்
காற்று மாசை எதிர்கொள்ளும் வகையில் பெட்ரோல், மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை இயக்க தேவையான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு மாநகராட்சி போக்குவரத்து கமிட்டியை கேட்டு கொள்கிறேன் " என்றார்.
  விழாவில் மாநகராட்சி கமிஷனர் அமன் மிட்டால், மேயர் விக்ராந்த் கோஜாமுண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story