ஹிஜாப் தடையை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஹிஜாப் தடையை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2022 7:59 PM IST (Updated: 19 March 2022 7:59 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் தடையை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பழனி:
திண்டுக்கல் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில், பழனி குளத்துரோடு ரவுண்டானாவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஷேக்பரீத் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அப்பாஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ‘ஹிஜாப்' அணிய தடை என்ற மாநில அரசின் உத்தரவு செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பினர். இதில் பலர் கலந்துகொண்டனர்.

Next Story