மினி பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன் பலி


மினி பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 19 March 2022 8:09 PM IST (Updated: 19 March 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

மினி பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன் பலியானார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி கவுண்டர் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சசிகுமார் (வயது 36). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில் சசிக்குமார் நேற்று திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பித்தளைப்பட்டி பிரிவு அருகே அவர் வந்தபோது, பித்தளைப்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மினி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட சசிக்குமார் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சசிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி பஸ் டிரைவரான பஞ்சம்பட்டியை சேர்ந்த ஜான் பவுல் பீட்டரை (50) கைது செய்தனர். 


Next Story