திருவாரூரில் கடும் பனிப்பொழிவு


திருவாரூரில் கடும் பனிப்பொழிவு
x
தினத்தந்தி 19 March 2022 8:24 PM IST (Updated: 19 March 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஒட்டிகள் மின் விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

திருவாரூர்:
திருவாரூரில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஒட்டிகள் மின் விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
கடும் பனிப்பொழிவு 
திருவாரூர் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அதே நேரத்தில இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் எங்கு பார்த்தாலும் பனி மூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் மின்விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். 
திருவாரூர் கமாலாயம் குளத்தின் நடுவே உள்ள நாகநாதர்கோவில் பணி மூட்டத்தின் நடுவே ரம்மியாக காட்சியளித்தது. இதனை அந்த வழியாக நடைபயிற்சி செல்பவர்கள் ரசித்தப்படி சென்றனர்.

Next Story