பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனிக்கு தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனிக்கு பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் காலையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தந்தப்பல்லக்கு புறப்பாடும், மாலையில் வெள்ளி யானை, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்று மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து அடிவாரம், கிரிவீதிகளில் வலம் வந்தனர்.
பின்னர் அவர்கள் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 10-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story