மினிவேன் மோதி தொழிலாளி பலி மனைவி கண் முன்னே பரிதாபம்


மினிவேன் மோதி தொழிலாளி பலி  மனைவி கண் முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 19 March 2022 8:36 PM IST (Updated: 19 March 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

மினிவேன் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற தொழிலாளி மனைவி கண் முன்னே பரிதாபமாக இறந்தார்.

குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே உள்ள பிறப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சிவா (வயது 35). கூலித்தொழிலாளி. நேற்று சிவாவும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் (23) சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பாளையம் அருகே வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த மினிவேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவா மனைவி கண் முன்னே பரிதாபமாக பலியானார். மேலும்  ஐஸ்வர்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குஜிலியம்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் மினிவேன் டிரைவர் அணியாப்பூரை சேர்ந்த பொன்னுசாமி மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story