தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
பழனி திருஆவினன்குடி கோவில் அருகில் உள்ள தெருவில் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் குறுகலாக உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயைவிட்டு வெளியேறி தெருவில் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பக்தர்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்து, பழனி.
குப்பையால் மூடப்பட்ட கால்வாய்
போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி ரெங்கநாதபுரம் அம்பேத்கர் காலனியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. மேலும் குப்பைகளும், மணலும் சூழ்ந்தன. இதனால் தற்போது கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் மூடப்பட்டு வருகிறது. கால்வாய் மூடபட்டதால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்வளவன், ரெங்கநாதபுரம்.
எரியாத தெருவிளக்கு
பழனி சண்முகநதி பகுதியில் உள்ள மயானம் அருகில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-மணி, பழனி.
விபத்து அபாயம்
தேனி புதிய பஸ்நிலையம் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் நிறைவடைந்ததும் பள்ளத்தை முறையாக மூடாமல் அதன் அருகில் தடுப்புகளை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வேந்திரன், தேனி.
Related Tags :
Next Story