காங்கேயம் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
காங்கேயம் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
முத்தூர்:
நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார். விழாவில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 110 இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசும்போது “ சமுதாயத்தில் நீங்கள் சந்திக்கும் அனைத்து தரப்பு மக்களையும் மரியாதையுடன் பேசிட முன்வர வேண்டும். நீங்கள் தாழ்வு மனப்பான்மை, தயக்கத்தை முற்றிலும் அகற்றி வாழ வேண்டும் என்றார்.
விழாவில் கல்லூரி அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story