திருக்கோவிலூர் அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.1 கோடியில் ஆய்வக கட்டிடம்
திருக்கோவிலூர் அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.1 கோடியில் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அரசினர் கபிலர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகக் கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆய்வக கட்டிடம் கட்ட உள்ள இடத்தை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, உதவி செயற்பொறியாளர் கவுதமன், உதவி பொறியாளர் சர்மா ஆகியோர் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பணியை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் கலந்து பேசி மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்தனர்.
Related Tags :
Next Story