ஆசிட் குடித்து தொழிலாளி தற்கொலை


ஆசிட் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 19 March 2022 9:56 PM IST (Updated: 19 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் ஆசிட் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம், 

திண்டிவனத்தில் புதுச்சேரி சாலையை சேர்ந்தவர் அசேன்(வயது 38). தொழிலாளி. இவரது மனைவி ஷர்மிளா. இவர் 5 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அன்று முதல் அசேன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். 
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கழிப்பறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை அசேன் குடித்துவிட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை அசேன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story