நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
உளுந்தூர்பேட்டையில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் உள்ள திருச்சி மெயின் ரோட்டில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையை தரமானதாகவும் விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வரும் பணிகள் குறித்து தலைமை பொறியாளர் சந்திரசேகரிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் ராஜகுமார், உளுந்தூர்பேட்டை உதவி கோட்ட பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் ராகுல், உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், நகராட்சி துணைத்தலைவர் வைத்தியநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story