சாராயம் விற்ற பெண் கைது


சாராயம் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 19 March 2022 10:14 PM IST (Updated: 19 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயசாந்தி (வயது 27) என்பவர், வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். 

இதைபார்த்த போலீசார் விஜயசாந்தியை கையும், களவுமாக பிடித்து கைது செய்து, அவரிடமிருந்த 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story