தினத்தந்தி புகார் பெட்டி
நாகை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
தார்சாலை வேண்டும்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி தாணியக்கோட்டகத்தை அடுத்த பிச்சக்கட்டளை, ராஜன்கட்டளை இணைப்பு பகுதியில் ஜல்லிக்கற்களான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஜல்லிக்கற்களான பாதையினால் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கரடு, முரடான சாலையினால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், வேதாரண்யம்.
Related Tags :
Next Story