சிவகங்கையில் புதிதாக பயிற்சி பள்ளி


சிவகங்கையில் புதிதாக பயிற்சி பள்ளி
x
தினத்தந்தி 19 March 2022 10:14 PM IST (Updated: 19 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

புதியதாக தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு பயிற்சி அளிக்க சிவகங்கையில் புதிதாக பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை, 
புதியதாக தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு பயிற்சி அளிக்க சிவகங்கையில் புதிதாக பயிற்சி பள்ளி தொடங்கப் பட்டு உள்ளது.
தேர்வு
தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்படும் போலீசாருக்கு பயிற்சி அளிக்க தற்போது 8 இடங்களில் போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. தற்போது இதை தவிர கூடுதலாக 14 இடங்களில் தற்காலிக பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
 இதில் சிவகங்கை ஆயுதப்படை வளாகத்தில் ஒரு தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளி புதிதாக தொடங்கப்பட்டுஉள்ளது கடந்த 11-ந் தேதி முதல் இந்த பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளி முதல்வராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உள்ளார். துணை முதல்வராக துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்ளார்.
இந்தப் பயிற்சிப் பள்ளியில் ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 222 போலீசார் களுக்கு 7 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 6 மாத பயிற்சி பள்ளியிலும், ஒரு மாதம் போலீஸ் நிலையங்களிலும் பயிற்சி அளிக்கப்படும். 
பயிற்சி
பயிற்சியில் சேர்ந்துள்ள போலீசாருக்கு சட்டம்-ஒழுங்கு குறித்த பயிற்சியை இன்ஸ்பெக்டர் ஜெய ராணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராமலிங்கம், மாசிலாமணி, ஜானகி ராமன், சாதிக், அருணாச்சலம், ராஜா, ஆகியோரும் மற்றும் இன்ஸ்பெக்டர் குலசேகர மந்திர செல்வி கவாத்து பயிற்சியும் அளிக்கிறார்கள்.

Next Story