மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த பயிற்சி
சின்னசேலம் அருகே மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
சின்னசேலம்,
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நயினார்பாளையம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். நயினார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி அன்புசெழியன், அட்மா சங்க வட்டார தலைவர் கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் சித்ராபெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் தமிழ்வளவன் வரவேற்றார். ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மணி பயிற்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கூடத்தை திறந்து மின் எந்திரம் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டார்.
இதில் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது குறித்து மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, வெங்கடசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் புஷ்பராஜ், ஒன்றிய பொறியாளர் தனபால், மாவட்ட கவுன்சிலர் கலையரசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகு வேல், சசிகுமார் மற்றும் மகளிர் குழுவினர் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story