புதிய கடற்கரையில் நாகை சங்கமம் விழா
புதிய கடற்கரையில் நாகை சங்கமம் விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
நாகப்பட்டினம்:
புதிய கடற்கரையில் நாகை சங்கமம் விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
சங்கமம் விழா
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை புதிய கடற்கரையில் 75- வது சுதந்திர தின அமுத பெருவிழா மற்றும் நாகை சங்கமம் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி, வேளாண் துறை சார்பில் பாரம்பரிய விதைநெல் கண்காட்சி, அரசின் திட்டங்களை வெளிப்படுத்தும் அரங்கம், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பொருட்களின் தரம் குறித்த விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்ட உள்ளது.
பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பாரம்பரிய ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவு தயாரிக்கும் முறை, மகளிர் சுய உதவி குழு, கைத்தறி துணிநூல் சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டும். கூட்டுறவு, சமூக நலன், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
விழா நடக்கும் ஒரு வாரமும் மாலையில் கலை பண்பாடுத்துறை சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுளளது. இதை, மக்கள் பார்வையிடலாம்.
விளையாட்டு போட்டிகள்
இதில் மாணவ-மாணவிகளிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள், பொழுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் புதிய கடற்கரையில் மாலை 4 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் நாளை(திங்கட்கிழமை) முதல் 26-ந்தேதி வரை பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளத
Related Tags :
Next Story