சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், 2-வது கணவர் மீது வழக்கு


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், 2-வது கணவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 March 2022 10:24 PM IST (Updated: 19 March 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், 2-வது கணவர் மீது வழக்கு

வேலூர்

வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமியின் தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சிறுமியின் தாயார் வேறு ஒரு நபரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 
இந்த நிலையில் அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

 அதன்பேரில் தாய் மற்றும் அவரது 2-வது கணவர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story