ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவவீரர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்


ஓய்வூதியம் பெறும்  முன்னாள் ராணுவவீரர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 March 2022 10:24 PM IST (Updated: 19 March 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவவீரர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்

வேலூர்

வேலூர் மாவட்ட ராணுவ ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இனிவரும் காலத்தில் அலகாபாத்திலிருந்து நேரடியாக ‘ஸ்பர்ஸ்’ என்ற அமைப்பின் மூலமாக அவர்களுடைய வங்கி கணக்கிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. எனவே தங்களுடைய ஆதார் எண் நகல், பான்கார்டு நகல், செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி, தற்போதைய இருப்பிட முகவரி போன்ற விவரங்களை ஏற்கனவே சமர்ப்பிக்காதவர்கள் மேற்கண்ட ஆவணங்களில் தங்களுடைய படைப்பிரிவு எண் மற்றும் ஓய்வூதிய புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டி.எஸ். எண், ஓய்வூதியம் பெறும் வங்கியின் பெயர் மற்றும் வங்கியின் கிளை போன்ற விவரங்களை அலுவலகத்தில் உடனடியாக நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
தபால் அல்லது dpdovel.cdachn@nic.in என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். இதன் மூலம் சிறப்பான முறையில் ஓய்வூதிய சேவை வழங்கப்படும். 

மேலும் அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்தவர்களுக்கு மட்டும் பயனர் ஐ.டி. மற்றும் கடவுச் சொல் வழங்கப்படும் என ராணுவ ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Next Story