சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்


சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 March 2022 10:25 PM IST (Updated: 19 March 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தேசிய நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள மாவட்டமாக விழுப்புரம் திகழ்கிறது. எனவே விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் காவலர்களை பணியில் அமர்த்தி சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும் சாலை பாதுகாப்பு உபகரணங்களான உயர் கோபுர மின்விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள், தடுப்பு கட்டைகள், பொதுமக்கள் சாலையை கடக்க ஏதுவாக ஜீப்ரா கிராசிங் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும். சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

24 மணி நேரமும் கண்காணிக்க... 

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டம் தொடர்பாக முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். அபாயகரமான பொருட்களை வாகனங்களில் கடத்துவதை தடுக்க தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிக்க வேண்டும். எவ்வித நெருக்கடியான சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் தீயணைப்பு வாகனங்கள் தயாராக இருத்தல் வேண்டும். அரசு மற்றும் தனியார் வசம் உள்ள அவசரகால ஊர்திகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.  கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திட்ட இயக்குனர் சங்கா, திண்டிவனம் கோட்டாட்சியர் அமித் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story