உத்தனப்பள்ளி அருகே கல்லூரி பஸ் மீது முறிந்து விழுந்த ஆலமரம்
உத்தனப்பள்ளி அருகே கல்லூரி பஸ் மீது முறிந்து ஆலமரம் விழுந்து டிரைவர் மாணவர் காயம் அடைந்தனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டையில் இருந்து ஓசூருக்கு தனியார் கல்லூரி பஸ் நேற்று 15 மாணவர்களை ஏற்றி சென்றது. உத்தனப்பள்ளி அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த டிரைவர் முருகேஷ் (வயது 50) பஸ்சை ஓட்டி சென்றார். ராயக்கோட்டை லாலிக்கல் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த ஆலமரம் திடீரென முறிந்து பஸ்சின் மீது விழுந்தது. இதில் டிரைவர் முருகேஷ் மற்றும் மெட்டரையை சேர்ந்த மாணவன் கிரண் (19) ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதில் பஸ் சேதமடைந்தது. இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story