பாகலூர் அருகே வெவ்வேறு இடங்களில் 2 தொழிலாளிகள் தற்கொலை


பாகலூர் அருகே வெவ்வேறு இடங்களில் 2 தொழிலாளிகள் தற்கொலை
x
தினத்தந்தி 19 March 2022 10:26 PM IST (Updated: 19 March 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

பாகலூர் அருகே வெவ்வேறு இடங்களில் 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொணடனர்.

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே வெங்கடேசபுரம் பக்கமுள்ள பெக்கிலி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நாகராஜ் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல், ஓசூர் தாலுகா நந்திமங்கலம் அருகே உள்ள எம்.காரப்பள்ளியை சேர்ந்தவர் அஸ்வத் நாராயணன் (56). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அஸ்வத் நாராயணன் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story