போலி சான்றிதழ் மூலம் பயிற்சியில் சேர்ந்த மேற்கு வங்காள பெண். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பயிற்சியில் சேர்ந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்
அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பயிற்சியில் சேர்ந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி சான்றிதழ்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகுபவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தேர்வானவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி அன்று பயிற்சிக்கு வந்தனர். பயிற்சிக்கு வந்தவர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிவதற்காக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பினர்.
இதில் மேற்கு வங்க மாநிலம், பூர்பா பர்தமான் மாவட்டத்தை சேர்ந்த கயுருனிஷா காதுன் (வயது 26) என்பவரின் சான்றிதழ்களை உண்மை தன்மைக்கு அனுப்பியதில் அவர் அளித்திருந்த சாதி சான்றிதழ் அம்மாநில அரசு அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் போலி சாதி சான்றிதழ் அளித்து பயிற்சிக்கு வந்தது தெரியவந்தது. .
போலீசார் விசாரணை
அதைத்தொடர்ந்து அவர் கடந்த 15-ந்தேதி அன்று பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், இதுகுறித்து மத்திய தொழிற் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கயுருனிஷா காதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story