அரக்கோணம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை
அரக்கோணம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்த தாய் உயிரிழந்தார்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்த தாய் உயிரிழந்தார்.
விஷம் குடித்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மின்னல் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு 4½ வயதில் ஒரு பெண் குழந்தையும, 2½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக லட்சுமி, வீட்டில் இருந்த விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை, ஜூசில் கலந்து பெண் குழந்தைக்கு கொடுத்து விட்டு, தானும் குடித்துள்ளார். இதில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
தாய் பலி
இதனை கண்ட குடும்பத்தினர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story