அரூர் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன்


அரூர் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 19 March 2022 10:28 PM IST (Updated: 19 March 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

அரூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரூர்:
பங்குனி உத்திரத்தையொட்டி அரூர், கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் முதுகில் அலகுகுத்தி கொண்டு பொக்லைன், வேன், டெம்போ, உரல் இழுத்தல் ஆகியவற்றை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். மேலும் பக்தர்களை சாமிக்கு முன்பு படுக்க வைத்து நெஞ்சின் மேல் உரல் வைத்து மஞ்சள் போட்டு உலக்கையால் இடித்து தூளாக்கி பக்தர்களுக்கு கொடுத்தனர். மேலும் பக்தர்கள் உடல் முழுவதும் எலுமிச்சம்பழம் குத்திக்கொண்டு கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கல்யாண சுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து குத்து விளக்கு பூஜையும், முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story