பென்னாகரம் பகுதியில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு


பென்னாகரம் பகுதியில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 19 March 2022 10:28 PM IST (Updated: 19 March 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் பகுதியில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பி.அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், மொத்த விற்பனை கடைகள், டீக்கடைகள், குளிர்பான கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) நந்தகோபால் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, ராகி மாவு மற்றும் செயற்கை நிறமேற்றிய தின்பண்டங்கள் உள்ளிட்ட காலாவதியான உணவு பொருட்களை கண்டறிந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 200 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதி உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொட்டலம் மற்றும் மறு பொட்டலம் இடுதல் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தரமற்ற, காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. வணிகர்கள், கடைக்காரர்கள் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அலுவலர்கள் அறிவுறுத்தினர். உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு நோட்டீசும், 3 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபாரதமும் விதித்தனர். 

Next Story