நாகையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2022 10:32 PM IST (Updated: 19 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை கண்டித்து நாகையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் நாகை அபிராமி அம்மன் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செய்யது அலி நிஜாம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அல்அமீன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் தேசிய கொடியை போல் ஹிஜாப் உடை அணிந்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story